தோசை உப்புமா | Dosa Upma

தேவையான பொருட்கள்:

தோசை - 4
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -1
இட்லிபொடி - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*தோசையை ப்ரிட்ஜில் 3 மணிநேரம் வைத்து எடுத்து நன்கு  உதிர்த்துக்கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய்+நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள், வெங்காயம், பச்சை மிளகாய் , உப்பு மற்றும் சர்க்கரை என ஒன்றன் பின் ஒன்றாக  சேர்த்து வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் உதிர்த்த இட்லி சேர்த்து கிளறி இட்லிப்பொடி தூவி கிளறி எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

*இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் நிறைந்த சுவையில் இருக்கும் இந்த உப்புமா.

பின் குறிப்பு:
*இந்த உப்புமா செய்வதற்கு இட்லி / தோசையை ப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் உதிர்க்க சுலபமாக இருக்கும்.

Related Videos