காளான் பிரியாணி | MushroomBiryani

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி - 3 கப்
அரிந்த பட்டன் காளான் - 2 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
நறுக்கிய தக்காளி - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கட்டு
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்
புட் கலர் - சிறிது
பச்சை மிளகாய் - 5
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

பிரியாணி இலை - 4
கிராம்பு - 4
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 6

செய்முறை விளக்கம் :

*பாத்திரத்தில் சிறிது பட்டர் மற்றும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளில் பாதி போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் பாதி நறுக்கிய புதினா கொத்தமல்லி மற்றும் காளான் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.அதிகம் தண்ணீர் விட வேண்டாம் காளான் தண்ணீர் விடும்.

*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் , மீதி புதினா கொத்தமல்லி,மீதமுள்ள தாளிப்பு பொருட்கள் சேர்த்து கொதிக்க விடவும்.தண்ணீர் நன்கு கொதித்ததும் எலுமிச்சை சாறு, அரிசி கழுவி போட்ட பின் 10 நிமிடத்தில் வடித்து விடவும். பதம் சரியாக இருக்கும்.

*ஒரு பாத்திரத்தில் சிறிது பட்டர் தடவி க்ரேவி, சாதம் மற்றும் காளான் க்ரேவி என மாற்றி மாற்றி போடவும்.மேலே சாதம் வரும்படி போடவும். அதன் மேல் சிறிது புட் கலர் ஊற்றவும். மீதமுள்ள பட்டர் போடவும்.

*அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்து 10 நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்.

*ராய்த்தா அல்லது வறுவலுடன் பரிமாறவும்.

Related Videos