கீரை பட்டாணி புலாவ் | Spinach Peas Pulao
தேவையான பொருள்கள்:
பாஸ்மதி - 2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 பெரியது
ப்ரோசன் பச்சைப்பட்டாணி - 1/4 கப்
கீறிய பச்சை மிளகாய் - 6
பொடியாக அரிந்த பசலைக்கீரை - 1 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் பால் - 1 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம் :
*குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
*பின் கீரை மற்றும் பட்டாணி சேர்த்து லேசாக வதக்கி அரிசி, தேங்காய்ப்பால், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
*3 விசில் அல்லது வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.
*ஈஸியான கீரை பட்டாணி புலாவ் ரெடி.
*இதற்க்கு முட்டை தொக்கு,உருளை வறுவல் நன்றாகயிருக்கும்.
பின்குறிப்பு :
*பட்டாணிக்கு பதில் கேரட் துறுவல் சேர்த்தும் செய்யலாம்.