காலிபிளவர் மிளகு பொரியல் | Cauliflower Pepper Poriyal
தேவையான பொருட்கள்:
காலிபிளவர் பூக்கள் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
நசுக்கிய பூண்டுப்பல் -4
கடுகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1கொத்து
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு, வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
*பின் காலிபிளவர் பூக்கள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு 10-15நிமிடங்கள் வேகவிடவும்.இடையிடையே கிளறி விடவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.
*காய் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.