ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் | Sprouts Pulao

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி - 2 கப்
முளைக்கட்டிய சென்னா,பச்சைபயறு - தலா 1/4 கப்
முளைகட்டிய வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 4
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்பால் - 1 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2

செய்முறை விளக்கம் :

*பாஸ்மதியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் பட்டர் மற்றும் எண்ணெய்எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, இஞ்சிப்பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், முளைகட்டிய சென்னா, வெந்தயம் மற்றும் பச்சைபயறு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் உப்பு, அரிசி, தேங்காய்ப்பால் மற்றும் 2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேக்கவும்.

*ஆறியதும் ராய்த்தா (அ) வறுவலுடன் பரிமாறவும்.

Related Videos