ஸ்வீட் கார்ன் மேத்தி புலாவ் | Sweetcorn Methi Pulao

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி - 2 கப்
ஸ்வீட் கார்ன்,பச்சை பட்டாணி - தலா 1/4 கப்
காய்ந்த வெந்தயக் கீரை - 1/4 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் - 1பெரியது
அரிந்த தக்காளி - 1 பெரியது
கீறிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2

செய்முறை விளக்கம் :

*காய்ந்த வெந்தயக்கீரை சிறிது வெந்நீரில் உப்பு சேர்த்து ஊறவைத்து அலசி வைக்கவும்.

*கார்னையும் நீரில் அலசி வைக்கவும்.பாஸ்மதியை ஊறவைத்து கழுவி வைக்கவும்.

*குக்கரில் சிறிது நெய் விட்டு பாஸ்மதியை லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

*மீதமிருக்கும் நெய் மற்றும்எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் கீரை, கார்ன், பட்டாணி, உப்பு, 3 கப் நீர், அரிசி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 3 விசில் வரை வைக்கவும்.

*வெந்ததும் எடுத்து ராய்த்தா அல்லது வறுவலுடன் பரிமாறவும்.

Related Videos