குடமிளகாய் உசிலி | Capsicum Usili
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய பச்சை+சிகப்பு குடமிளகாய் - தலா 1/2 கப்
கடலைப்பருப்பு+துவரம்பருப்பு - தலா 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
கடுகு +உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு இவற்றை 1 மணிநேரம் ஊறவைத்து சோம்பு, காய்ந்தமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
*அதனை ஆவியில் வேகவைத்து நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு உப்பு மற்றும் குடமிளகாயை சேர்த்து லேசாக வதக்கி தனியாக வைக்கவும்.
*அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் விட்டு கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து உதிர்த்த பருப்பினை சேர்த்து நன்கு வதக்கவும்.
*பொலபொலவென வரும்போது வதக்கிய குடமிளகாய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
பின் குறிப்பு:
*விரும்பினால் தேங்காய்த்துறுவல் சேர்க்கலாம்.
*குடமிளகாயை 4- 5 நிமிடங்கள் வதக்கினால் போதும். இல்லையெனில் Crunchiness போய்விடும்.