கோஸ் கேரட் தோரன் | CabbageCarrot Thoran
தேவையான பொருட்கள்:
துருவிய கோஸ்+கேரட் - தலா 1/2 கப்
தேங்காய் துறுவல் - 3/4 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 4
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 3/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*ஒரு பவுலில் துருவிய கேரட், கோஸ், தேங்காய்த்துறுவல், பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, ம.தூள் மற்றும் சீரகத்தூள் இவற்றை சேர்த்து நன்றாக கையால் நன்கு பிசறவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து
கேரட் கோஸ் கலவையினை சேர்த்து சிறு தீயில் மூடி போட்டு வேகவிடவும்.
*நீர் சேர்க்க தேவையில்லை,காய்களிலிருந்து வரும் நீரே போதுமானது,இடையிடையே கிளறி விடவும்.இல்லையினில் அடிபிடிக்கும்,வெந்ததும் இறக்கவும்.