வெஜ் புலாவ் | Veg Pulao
தேவையான பொருள்கள்:
பாஸ்மதி - 3 கப்
வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த பீன்ஸ்,கேரட்,பட்டாணி கலவை - 1 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
செய்முறை விளக்கம் :
*வெங்காயத்தை நீளவாக்கில் அரியவும்.
*குக்கரில் பட்டர், எண்ணெய்விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கவும்.
*பின் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் 3 கப் அரிசிக்கு 4 1/2 கப் தண்ணிர் வைத்து உப்பு மற்றும் அரிசி சேர்க்கவும்.
*3 விசில் வைத்து இறக்கி பச்சடி அல்லது க்ரேவியுடன் பறிமாறவும்.