ஸ்டப்டு வெண்டைக்காய் | stuffed okra gujarati recipe

தேவையான பொருட்கள்:

பிஞ்சு வெண்டைக்காய் - 20 எண்ணிக்கை
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
பெருங்காய்த்தூள் -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

ஸ்டப்பிங் செய்ய:

தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 5 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 6 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
தனியா - சீரகத்தூள் = 2 டீஸ்பூன்
எள்- 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*கடலை மாவை வெறும் கடாயில் 5 நிமிடம் வதக்கவும்.

*ஆரியதும் அதனுடன் ஸ்டப்பிங் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும்.

*வெண்டைக்காயை கழுவி துடைத்து நடுவில் கீறி ஸ்டப்பிங்கை 1 டீஸ்பூன் அளவில் வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து ஸ்டப்டு வெண்டைக்காய் சேர்த்து சிறுதீயில் மூடி போட்டு 20 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

*நடுநடுவே கிளறி விடவும்.

பின் குறிப்பு:

*விரும்பினால் ஸ்டப்பிங் பொருட்களுடன் 2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்க்கலாம்.

*ஒரிஜினல் ரெசிபியில் 6 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துறுவலுக்கு பதில் நான் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துறுவல்+5 டேபிள்ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்துள்ளேன்.

Related Videos