கருணைக்கிழங்கு பொடிமாஸ் | Yam Podimas

தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு - 1/2 கி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*கருணைக்கிழங்கை தோல் சீவி கழுவி துருவிக்கொள்ளவும்.

*அதனை ஆவியில் 10-15 நிமிடங்கள் வேகவைத்தெடுக்கவும்.

*நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் உப்பு மற்றும் வேகவைத்த கருணைக்கிழங்கை சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை வதக்கி தேங்காய்த்துறுவல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

Related Videos