டோஃபு(சோயா பனீர்)&ப்ரோக்கலி புலாவ் | Tofu & Broccoli Pulao

தேவையான பொருள்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
டோஃபு - 100 கிராம்
ப்ரோக்கலி பூக்கள் - 1 கப்
துருவிய கேரட் - 1
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

பச்சை மிளகாய் - 4
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1சிறுதுண்டு
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம் :

*டோஃபுவில் சிறிது மிளகாய்த்தூள், சிறிது இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்து எண்ணெயில் லேசாக பொரித்தெடுக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைக்கவும்.ப்ரோக்கலியை உப்புத் தண்ணீரில் அலசி வைக்கவும்.

*கடாயில் பட்டர், எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், ப்ரோக்கலி மற்றும் துருவிய கேரட் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்றாக வதங்கியபின் அரைத்த விழுது, கேரட் துறுவல், உப்பு மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

*நன்கு கொதிக்கும்போது பொரிந்த டோஃபுவை போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு,சாதத்தை போட்டு கிளறி இறக்கவும்.

Related Videos