கோஃப்தா பிரியாணி | Kofta Biryani
தேவையான பொருள்கள்:
பாஸ்மதி - 2 கப்
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளாகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லிதழை - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
கோஃப்தா செய்ய:
புடலங்காய் - 1 நடுத்தரசைஸ்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம் :
*புடலங்காயை நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து 15 நிமிடம் வைக்கவும்.
*பின் நன்கு அலசி நீரை நன்கு பிழிந்து, அதனுடன் கா.மிளகாய், உப்பு, சோம்பு, சின்ன வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
*அரைத்த விழுதுடன் பொட்டுக்கடலை மாவு சேர்த்து கெட்டியாக பிசையவும். பதம் தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொட்டுக்கடலை மாவை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து வைக்கவும்.
*குக்கரில் பட்டர் மற்றும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, தூள் வகைகள், புதினா கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
*வதங்கியதும் அரிசி, தேங்காய்ப்பால் மற்றும் +1 1/2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து கோஃப்தாக்களைப் போட்டு உடையாமல் கிளறி 5 நிமிடம் மூடி பின் பரிமாறவும்.
பின்குறிப்பு :
* புடலங்காய்க்கு பதில் கோஸ்,இறால் சேர்த்தும் செய்யலாம்.