மைசூர் மசாலா தோசை| Mysore Masala Dosa

இது நாம் சாதாரணமாக செய்யும் மசாலா தோசை போலதான்..சிகப்பு சட்னியை தோசை சிறிது வெந்ததும் அதன்மேல் தடவி ஸ்டப்பிங் வைத்து மடிப்பதுதான் மைசூர் மசாலா தோசை.மசாலா தோசையை நான் காலிபிளவர் மசாலாவை ஸ்டப்பிங் செய்து ஏற்கனவே செய்துள்ளேன்.இம்முறை இந்த தோசைக்கு பிரபலமான உருளை மசாலவை ஸ்டப்பிங் வைத்து செய்துள்ளேன்..

தேவையான பொருட்கள்:

தோசை மாவு  - 3 கப்
சிகப்பு சட்னி   - தேவைக்கு
உருளை மசாலா   - தேவைக்கு
நல்லெண்ணெய்/நெய்
சிகப்பு சட்னி செய்ய தே.பொருட்கள்
பூண்டுப்பல் -  10
வரமிளகாய் -  8
தக்காளி - 1
உப்பு+எண்ணெய் தேவைக்கு

செய்முறை விளக்கம்:

* மேற்கூறிய பொருட்களில் உப்பை தவிர மீதமுள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி ஆறியதும் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

உருளை மசாலாவுக்கு தேவையான பொருட்கள்:

வேகவைத்த உருளை - 2 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம்  - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க‌:

கடுகு+உளுத்தம்பருப்பு  தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் மஞ்சள்தூள், உப்பு, சோம்புத்தூள் மற்றும் மசித்த உருளை சேர்த்து கிளறி தேவையான நீர் சேர்த்து கொதிக்கவைத்து கெட்டியனதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

மைசூர் மசாலா தோசை செய்முறை விளக்கம்:

*தோசைகல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி மெலிதாக தேய்த்து சுற்றிலும்  நல்லெண்ணெய்/நெய் ஊற்றி வேகவிடவும்.

*வெந்ததும் சிகப்பு சட்னியை பரவலாக தடவி அதன்மேல் உருளை மசாலாவை வைத்து மடித்து எடுக்கவும்.

*சட்னி / சாம்பாருடன் பரிமாறவும்.

Related Videos