கேரட் பீன்ஸ் தோரன் | Carrot Beans Thoran
தேவையான பொருட்கள்:
துருவிய கேரட் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
தேங்காய் துறுவல் - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை விளக்கம்:
*துருவிய கேரட், பீன்ஸ், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு மற்றும் தேங்காய்துறுவல் இவற்றை ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து 15 நிமிடம் வைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து பிசைந்து வைத்த கலவையை சேர்த்து சிறிது நீர் தெளித்து சிறு தீயில் மூடி போட்டு வேகவிடவும்.
* இடையிடையே கிளறி விட்டு வெந்ததும் இறக்கவும்.
பின் குறிப்பு: