நெய் சாதம் | Ghee Rice
தேவையான பொருள்கள்:
வெங்காயம் - 1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
புதினா - சிறிது
பச்சை மிளகாய் - 3
பட்டர் அ நெய் - 5 டேபிள்ஸ்பூன்
தயிர் - 125கிராம்
தாளிக்க:
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரியாணி இலை -3
பட்டை - 1 சிறு துண்டு
செய்முறை விளக்கம் :
*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.
*அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
*குக்கரில் பட்டர் போட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், புதினா மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும்.
*1 கப் அரிசிக்கு = 11/2 கப் தண்ணீர் விகிதம் 3 கப் அரிசிக்கு 41/2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் அரிசி போட்டு மூடவும்.
*ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடம் அல்லது 3 விசில் வந்து இறக்கவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாதத்தை உடையாமல் கிளறவும்.
பின்குறிப்பு :
*விருப்பப்பட்டால் பாதி தண்ணீர்+பாதி தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.நெய் சாதத்துடன் மட்டன்,சிக்கன் குருமாவுடன் பரிமாறவும்.