வாழைப்பூ மிளகு பொரியல் | Vazhaipoo pepper poriyal

தேவையான பொருட்கள்:

பொடியாக அரிந்த வாழைப்பூ - 2 கப்
சின்ன வெங்காயம் - 6
பூண்டுப்பல் -2
வேர்கடலை - 1/4 கப்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

* பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.   வேர்க்கடலையை ஒன்றும் பாதியுமாக உடைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி வாழைப்பூ , உப்பு மற்றும் தேவையானளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*வெந்ததும் மிளகுத்தூள் மற்றும் வேர்க்கடலை சேர்த்து கிளறி இறக்கவும்.

பின் குறிப்பு:

*வேர்க்கடலைக்கு பதில் தேங்காய் துருவல் சேர்க்கலாம்.

Related Videos