வெந்தய தோசை | vendhaya dosa

இந்த தோசை உடலுக்கு மிக குளிர்ச்சியை தரும்,மிகவும் நல்லது.உளுந்துக்கு பதில் வெந்தயம் கூடுதலாக சேர்த்து செய்வது தான் இந்த தோசை.இதில் இட்லி சரியாக வராது.

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி  - 3 கப்
வெந்தயம் - 2 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*அரிசி மற்றும் வெந்தயம் இவற்றை தனிதனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

*முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை சேர்த்து உளுந்து அரைப்பது போல் நன்கு பொங்க அரைத்து அதிலேயே அரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
*உப்பு சேர்த்து 8 மணிநேரம் புளிக்க வைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.

*தோசையை ஊற்றி மூடிபோட்டு வேகவைத்து எடுக்கவும்.மறுபக்கம் திருப்பி போட சரியாக வராது.

*இதற்கு தொட்டுக்கொள்ள காரமான சட்னிதான் நன்றாக இருக்கும்.

Related Videos