பீட்ரூட் பொரியல் | Beetroot Poriyal
தேவையான பொருட்கள்:
பீட்ருட் துருவல் - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*பீட்ரூட் துறுவல், உப்பு , பச்சை மிளகாய் மற்றும் சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.
*காய் வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.