கதம்ப சாதம் | Kadhamba Satham

தேவையான பொருள்கள்:

அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
புளிகரைசல் - 1 1/2 கப்
விருப்பமான காய்கறிகள் - 3 கப்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை+கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை விளக்கம் :

*அரிசியை 3 கப் நீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.2 பருப்புகளையும் வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் காய்களை போட்டு முழ்குமளவு நீர் விட்டு 15நிமிடம் வேகவைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் புளிகரைசல், உப்பு, சாம்பார் பொடி, கறிவேப்பிலை மற்றும் பாதி வேக்காடு வேகவைத்த காய்கறிகள் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.

*காய்கள் வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவைத்து வேகவைத்த சாதம் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறவும்.

*கடைசியாக நெய் சேர்க்கவும். ஊறுகாய்,அப்பளமுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

Related Videos