தாமரைத் தண்டு(Lotus Root)வறுவல் | Lotus Root Varuval

சமைக்கும் முறை:

இதன் மேல் தோலை சீவிவிட்டு மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவி பயன்படுத்தவும்.தண்டு இளசாகவோ அல்லது முற்றியதாகவோ இருந்தால் சமைத்தாலும் நறுக் நறுக் என்ரு தான் இருக்கும்.இதன் தண்டை பச்சையாகவே சாப்பிட்டால் ரொம்ப இனிப்பா நன்றாகயிருக்கும்.உப்பு எப்படிதான் போட்டாலும் தண்டில் ஏறாது,உப்பில்லாமல் சப்புன்னு இருக்கும்.

சத்துக்கள்:

இதில் கொழுப்பு,சர்க்கரை எதுவுமில்லை.100 கிராம் தண்டில் கார்போஹைட்ரேட் 16 கிராம்,ப்ரோட்டீன் 2 கிராம் இருக்கு.விட்டமின் C 54% ,விட்டமின் B6 13% இருக்கு.

வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

தாமரைத்தண்டு - 1 பெரியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கார்ன்மாவு - 1 டீஸ்பூன்
கடலைமாவு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது

செய்முறை விளக்கம்:

*தாமரைத்தண்டை தோல்சீவி மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்துப் பொருட்களும் சேர்த்து பிசிறி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் தவாவில் எண்ணெய்விட்டு வறுக்கவும்.

பின் குறிப்பு:

*இது வாழைக்காய் வருவல் மாதிரி இருக்கும்.நானே இதுநாள்வரை இத்தண்டினை பார்த்ததும்,சாப்பிட்டதும் இல்லை.முதன்முறையாக வாங்கி சமைத்து சாப்பிட்டேன் மிகவும் நன்றாக இருந்ததால் உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.உங்களுக்கும் கிடைத்தால் சமைத்துப் பாருங்களேன்,அப்புறம் எப்பவும் இதைதான் செய்வீங்க.

Related Videos