குடமிளகாய் சாதம் | CapsicumRice

தேவையான பொருள்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
துண்டுகளாகிய குடமிளகாய் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
நெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் - தேவைக்கு

வறுத்து பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம் :

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும். வேர்க்கடலையை தவிர மற்றவைகளை நைசாக பொடித்து கடைசியாக வேர்க்கடலையை சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் குடமிளகாயை சேர்த்து லேசாக வதக்கினால் போதும்.

*பின் பொடித்த பொடி, சாதம், உப்பு, நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

Related Videos