பிரவுன் ரைஸ் வாங்கிபாத் | Brown Rice Vangi Bath
தேவையான பொருள்கள்:
உதிராக வடித்த பிரவுன் ரைஸ் - 1 கப்
பொடியாக அரிந்த கத்திரிக்காய் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வறுத்து பொடிக்க:
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
காய்ந்த தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம் :
*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து நைசாக பொடிக்கவும்.
*கடாயில் பட்டர், எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம், கத்திரிக்காயை நன்கு வதக்கவும்.
*கத்திரிக்காயை எண்ணெயிலேயே வதக்கவும் வெந்ததும் பொடித்த பொடி, உப்பு மற்றும் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.