பூரி

தேவையான பொருட்கள்:

கோதுமைமாவு - 2 கப்
ரவை - 2டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை விளக்கம்:

*பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் தவிர மீதி பொருட்களை ஒன்றாக கலந்து நேர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*10 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு சம உருண்டைகளாக எடுத்து  மெலிதாக இல்லாமலும் தடிமனமாக இல்லாமலும் தேய்க்க வேண்டும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். சிறு உருண்டை மாவை எடுத்து எண்ணெயில் போட்ட உடனே மேலே மிதந்து வந்தால் அதுவே சரியான பதம்.

*உடனே தேய்த்த மாவை எடுத்து எண்ணெயில் போட்டதும் மேலே உப்பி வரும்.

*மறுபுறம் மெதுவாக திருப்பி வேக வைத்து எடுக்கவும்.

பின் குறிப்பு:

*எண்ணெய் நன்கு காயவில்லையெனில் பூரி எண்ணெய் குடித்து விடும்.

*பூரியை மெலிதாக தேய்த்தால் மொறுமொறுப்பாகிவிடும்,தடிமனமாக தேய்த்தால் ரப்பர் போல இருக்கும்.

* பூரிக்கு மாவு பிசைந்து 10 நிமிடம் ஆனதும் சுட்டெடுக்கவும் இல்லையெனில் பூரி எண்ணெய் குடிக்கும்.

*சர்க்கரை சேர்ப்பது பூரி பொன்னிறமாக வருவதற்க்கும் மற்றும் ரவை சேர்ப்பது பூரி உப்பலாக வருவதற்கும் சேர்க்கபடுகிறது.

Related Videos