எள்ளோதரை(எள் சாதம்) | Sesame Seeds Rice

தேவையான பொருள்கள்:

உதிராக வடித்த சாதம் - 1 கப்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிது

வறுத்துப் பொடிக்க:

எள் - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 3
பெருங்காயம் - 1 சிறுகட்டி

செய்முறை விளக்கம் :

*வறுக்க கொடுத்துள்ள பொருட்களில் எள் மற்றும் உளுத்தம்பருப்பு வெறும் கடாயில் வறுத்தும்,காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயம் எண்ணெயிலும் வறுக்கவும்.

*முதலில் காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொடிக்கவும்.மிளகாயுடன் உப்பு சேர்த்து பொடித்தால் சீக்கிரம் அரைபடும். பின் உளுத்தம்பருப்பு மற்றும் எள் சேர்த்து நைசாக பொடிக்கவும்.

*சாதத்தை ஆறவைத்து நல்லெண்ணெய் கலக்கவும். அதனுடன் பொடித்த பொடி, தேவையான உப்பு மற்றும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொட்டி ஒன்றாக கலக்கவும்.

Related Videos