வெங்காய பச்சடி & களகோஸ் குருமா
வெங்காய பச்சடி செய்ய
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
தயிர் - 1 கப்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து வெங்காயம் போட்டு லேசாக வதக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் உப்பு+தயிர் சேர்த்து கலக்கி சப்பாத்தியுடன் பரிமாறவும்.
களகோஸ் க்ரேவி செய்ய தேவையான பொருட்கள்:
களகோஸ் - 5
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
*களகோஸை நான்காக வெட்டி மூழ்குமளவு நீர் விட்டு உப்பு சேர்த்து 3/4 பதமாக வேகவைக்கவும்.களகோஸ் சீக்கிரம் வெந்துவிடும்
*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் தேங்காய் விழுது மற்றும் களகோஸ் மற்றும் வேகவைத்த நீருடன் சேர்க்கவும்.
*நன்கு கொதித்ததும் இறக்கவும்.