வல்லாரை கீரை தண்ணிசாறு | vallarai keerai thani saru

தேவையான பொருட்கள்: 

வல்லாரைகீரை - 1 கட்டு

நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1

பொடியாக அரிந்த தக்காளி - 1

கீறிய பச்சை மிளகாய் - 2

மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்

புளிகரைசல் - 1/4 கப்

அரிசி கழுவிய தண்ணீர் - 2 கப்

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பாத்திரத்தில் கீரை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் மற்றும் அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*தேங்காயை மைய அரைத்துக்கொண்டு,குழம்பு நன்கு கொதித்ததும் தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*பின் வடகத்தை தாளித்து கொட்டவும்.

பின் குறிப்பு:

*அரிசி கழுவிய 3ம் தண்ணீர் எடுத்து செய்யனும்.அதில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.இறால் சேர்க்கும் போது வெங்காயம் மற்றும் தக்காளியெல்லாம் வதக்கி கீரைமற்றும்  இறால் சேர்த்து வதக்கி மேற்சொன்னபடி செய்யவேண்டும்.தாளிப்பை கடைசியில்தான் சேர்க்கவும்.அப்போழுதுதான் நல்ல வாசனையாக இருக்கும்

Related Videos