பொன்னாங்கண்ணிக் கீரை கடையல் | 2 /Ponnanganni Keerai(Dwarf Copperleaf) Kadayal

தேவையான பொருட்கள்:

பொன்னாங்கண்ணி கீரை - 1 கப்

பூண்டுப்பல் - 3

நறுக்கிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் -2

புளி - 1 நெல்லிக்காயளவு

உப்பு -தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய் -1/2 டீஸ்பூன்

கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*மேற்கூறிய பொருட்களை ஒன்றாக போட்டு 1/2 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*கீரை வெந்ததும் ,ஆறவைத்து நீரைவடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும்.

*கெட்டியாக இருந்தால் கீரை வேகவைத்த நீர் சேர்த்து ,தாளித்து சேர்க்கவும்

Related Videos