வாழைத்தண்டு கூட்டு | Banana Stem Kootu
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - 1 சிறியது
பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
கீறிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*வாழைத்தண்டை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு சுத்தம் செய்து வைக்கவும்.
*குக்கரில் பாசிப்பருப்பு மற்றும் மஞ்சள்தூள் போட்டு வேகவைக்கவும்.
*வெந்ததும் வாழைத்தண்டு மற்றும் உப்பு சேர்த்து 1 விசில் வைத்து வேக வைக்கவும்.
*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெந்த கூட்டில் சேர்க்கவும்