ரவை புட்டு

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

சர்க்கரை - 1/2 கப்

தேங்காய்த் துறுவல் - 1/2 கப்

ஏலக்காய் -2

உப்பு - 1சிட்டிகை

நெய் - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*ரவையை சிறிது நெய்விட்டு பிசிறி கடாயில் வறுக்கவும்.ஏலக்காயை பொடிக்கவும்.

*உப்பு கரைத்த நீரை சிறிது சிறிதாக தெளித்து புட்டுமாவு பதத்தில் பிசிறி ஆவியில் வேகவிடவும்.

*வெந்ததும் நெய் தொட்டு கையால் கட்டியில்லாமல் உதிர்த்து ஏலக்காய்ப்பொடி+சர்க்கரை+தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின் குறிப்பு:

*இந்த புட்டு செய்வது மிகவும் எளிது.விருப்பட்டால் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்

Related Videos