இனிப்பு புட்டு

தேவையான பொருட்கள்:

புட்டு மாவு - 1 கப்

சர்க்கரை - 1/2 கப்

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்

ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு

பேரிச்சம்பழம் - 4

உப்பு - தேவைக்கு 

செய்முறை விளக்கம்:

*புட்டு மாவில் உப்பு சேர்த்து கலந்து சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசையவும்.கையால் எடுக்கும் போது உதிரி உதிரியாக பிசைந்த மாவு இருக்க வேண்டும்.

*இட்லி பாத்திரத்தில் அதனை ஆவியில் வேகவைக்கவும்.இடைஇடையே மாவை கிளறி விடவும்.வெந்ததும் இறக்கவும்.

*ஒரு கடாயில் 1 கை நீர் தெளித்து சர்க்கரையை போட்டு கரைய விடவும்.கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வெந்த மாவை அதில் கொட்டி தேங்காய்த்துறுவல், முந்திரி மற்றும் நறுக்கிய பேரிச்சம்பழம் சேர்த்து கிளறி விடவும்

Related Videos