சேமியா புட்டு
தேவையான பொருட்கள்:
சேமியா - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
செய்முறை விளக்கம்:
*சேமியாவை நெய் விட்டு லேசாக வறுக்கவும்.புட்டு செய்வதற்க்கு மெல்லிய சேமியாதான் ஏற்றது.
*அதனுடன் உப்பு மற்றும் நீர் தெளித்து புட்டுக்கு பிசைவதுப்போல் பிசைந்து 10 நிமிடம் வைக்கவும்.
*பின் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*சூடாக இருக்கும் போதே அதனுடன் மீதமுள்ள பொருட்களை கலந்து பரிமாறவும்