உருளை+பட்டாணி வறுவல் | potato Peas Varuval
தேவையான பொருட்கள்:
வேக வைத்த உருளைக்கிழங்கு - 4
பச்சைப் பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
கொத்தமல்லித் தழை - சிறிது
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
நசுக்க வேண்டியவை:
இஞ்சி - சிறு துண்டு
பூண்டுப்பல் - 7
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 7
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*வெங்காயம்,தக்காளியை அரியவும்,உருளையை பெரியதுண்டுகளாக கட் செய்யவும்.
*நசுக்க வேண்டிய பொருட்களை நன்கு நசுக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு வெங்காயம் மற்றும்
நசுக்கிய இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
*பச்சை வாசனை போனதும் தக்காளியை போட்டு நன்கு மசிக்க வதக்கி மிளகாய்த்தூளைப் போட்டு எண்ணெயிலேயே வதக்கவும்.
*தூள் வாசனை போனதும் உப்பு, உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியைப் போட்டு நன்கு வதக்கவும்.
*எண்ணெய் லேசாக பிரிந்து வரும் போது கொத்தமல்லித் தூவி இறக்கவும்.
பின் குறிப்பு:
*ப்ரெஷ் பட்டாணி இல்லையெனில் காய்ந்த பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேக வைத்து செய்யலாம்.குக்கரில் வேக வைக்ககூடாது குழைந்து விடும்.