பாகற்காய் வறுவல் | Bitter gourd Fry
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
வறுத்து பொடிக்க:
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பாகற்காய் மற்றும் வெங்காயத்தை நறுக்கவும்.வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.
*கடாயில் நறுக்கிய பாகற்காய், வெங்காயம், உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.
*பாகற்காய் வெந்ததும் நன்கு சுருள கிளறி பொடித்த பொடியை தூவி இறக்கவும்.