உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் வறுவல் | Potato Varuval With Coconut Milk
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3 பெரியது
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப்
காஷ்மிரி மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை விளக்கம்:
*உருளையை தோல்சீவி நடுத்தர துண்டுகளாக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் மிளகாய்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் உப்பு, தேங்காய்ப்பால் மற்றும் உருளை சேர்த்து வேகவைத்து நன்கு சுருள கிளறி இறக்கவும்.