வெந்தயக்கீரை குட்டி உருளை வறுவல் | Baby Potato Varuval With Methi Leaves
தேவையான பொருட்கள்:
வேகவைத்து தோலுரித்த குட்டி உருளை - 1/4 கிலோ
வெந்தயக்கீரை - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம்,தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*உருளையை முள் கரண்டியால் அங்கங்கே குத்திவிடவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் வெந்தயக்கீரை மற்றும் உருளை சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்கவும்.