அருநெல்லிக்காய் சாதம் | Amla Rice
தேவையான பொருள்கள்:
உதிராக வடித்த சாதம் -1 கப்
சின்ன வெங்காயம் -10
அருநெல்லிக்காய்- 4
வேர்க்கடலை-1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு -1/4 டீஸ்பூன்
உளுத்த பருப்பு -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-2
கறிவேப்பிலை -சிறிது
கடலைப்பருப்பு -1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம் :
*வெங்காயத்தை நறுக்கவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி துருவவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வேர்க்கடலையை வறுக்கவும்.
*பின் வெங்காயம், துருவிய நெல்லிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
*நெல்லிக்காய் நன்கு வெந்த பின் (நீர் ஊற்றக்கூடாது,நெல்லிக்காய் விடும் நீரிலயே வேகும்) ஆறவைத்து உப்பு, சாதம் சேர்த்து கிளறி பரிமாறவும்.
பின்குறிப்பு :
*இந்த சாதம் எலுமிச்சை சாதம் போல் இருக்கும்.