செட்டிநாடு உருளை மசாலா | Chettinad Potato Masala
தேவையான பொருட்கள்:
வேகவைத்த உருளை - 2 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள்,கடுகு -தலா 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கரகரப்பாக அரைக்க:
காய்ந்த மிளகாய் - 7
சின்ன வெங்காயம் - 1
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
*பின் அரைத்த மசாலா மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் துண்டுகளாகிய உருளையை சேர்த்து வதக்கவும்.
*மசாலா நன்குகலந்த பின் சிறிது நேரம் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.