ஒட்ஸ் பார்லி இட்லி | Oats & Barley Idli
தேவையான பொருட்கள்:
ஒட்ஸ் - 1 கப்
பார்லி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*மேற்கூறிய பொருட்களில் ஒட்ஸ் மற்றும் உப்பைத் தவிர பார்லி,உளுந்து மற்றும் வெந்தயம் ஒன்றாக ஊறவைக்கவும்.
*ஊறியதும் பார்லி+உளுந்து மைய அரைக்கவும்.
*ஒட்ஸை சிறிது நேரம் தண்ணிரில் ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
*புளித்ததும் இட்லி(அ)தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.