சேனைக்கிழங்கு வறுவல் | Senai kizhangu Varuval
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
வரமிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
* சேனைக்கிழங்கை தோல் சீவி மெலிதாக நீளவாக்கில் நறுக்கி கழுவி நீரை வடிக்கவும்.
*அதில் எண்ணெய் தவிர மேற்கூறிய பொருட்கலை ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் வறுத்தெடுக்கவும்.