ஸ்டப்டு பாகற்காய | Stuffed Bitter Gourd
தேவையான பொருட்கள்:
பெரிய பாகற்காய் -2
புளிவிழுது - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வெல்லம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
ஸ்டப்பிங் செய்ய:
துவரம்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*துவரம்பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு மற்றும் தேங்காய்துறுவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
*பாகற்காயை நடுவில் கீறி விதைகளை நீக்கி கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
*இப்படி செய்வதால் கசப்புத்தன்மை நீங்கும்.
*மீண்டும் பாத்திரத்தில் புளிவிழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெல்லம், உப்பு, சிறிது நீர் மற்றும் பாகற்காய் சேர்த்து வேகும் வரை வைத்து நீரை வடிகட்டவும்.
*அதனுள் அரைத்த கலவையை ஸ்டப்பிங் செய்து நூலால் கட்டவும்.இதனால் ஸ்டப்பிங் வெளியே வராது.
*இதனை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.தயிர் சாதத்திற்க்கு மிக நன்றாக இருக்கும்.