சில்லி இட்லி | Chilli Idli
தேவையான பொருட்கள்:
இட்லி - 6
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பொடியாக அரிந்த இஞ்சி,பூண்டு - 1டீஸ்பூன்
பொடியாக அரிந்த குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*இட்லியை கட்செய்து முற்சூடு செய்த அவனில் 270 டிகிரியில் 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் தூள் வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு பின் சோயா சாஸ், கெட்சப், குடமிளகாய் மற்றும் இட்லி சேர்த்து கிளறி இறக்கவும்.