வெஜ் பிரியாணி(லேயர் செய்முறை)

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி - 4 கப்
வெங்காயம்- 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பிரியாணி மசாலாப் பொடி - 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1டேபிள்ஸ்பூன்
ரெட்கலர் - 1சிட்டிகை
மஞ்சள்கலர் - 1 சிட்டிகை
தயிர் - 125 கிராம்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி -1 கைப்பிடி
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பட்டன் காளான் - 6
கேரட் - 2
பீன்ஸ் -100 கிராம்
ப்ரோசன் பட்டாணி- 1 கப்
குடமிளகாய் - 1 சிறியது

தாளிக்க:

பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3+3
பிரியாணி இலை - 3
ஏலக்காய் - 2

தாளிக்க:

பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3+3
பிரியாணி இலை - 3
ஏலக்காய் - 2

செய்முறை விளக்கம் :

*வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் அரியவும்,பச்சை மிளகாயை கீறவும்.

*காய்களை நடுத்தர சைசில் நறுக்கவும்,புதினா கொத்தமல்லியை நறுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் சாதம் வடிக்கும் அளவு நீர் ஊற்றவும். அதில் 3 கிராம்பு, ஏலக்காய், 1 பட்டை துண்டு, சிறிது புதினா கொத்தமல்லி, எலுமிச்சைசாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து அரிசியை 3/4பாகம் வெந்ததும் வடித்து ஆறவைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் 3 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள மீதமுள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

*வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய், பிரியாணி மசாலாப் பொட மற்றும் மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் கேரட் மற்றும் பீன்ஸ் போட்டு நன்கு வதக்கவும்.பின் உப்பு, தயிர், 1 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

*காய் வெந்ததும் காளானை போட்டு மூடவும்.தன்ணீர் ஊற்ற வேண்டாம் காளான் நீர் விடும்.
*5 நிமிடம் கழித்து பட்டாணி மற்றும் குடமிளகாய் போட்டு 5நிமிடம் வேகவிடவும்.

*காய்கள் அனைத்தும் வெந்ததும் இறக்கி ஆறவிடவும்.

*ஒரு பெரிய பாத்திரத்தில் 1/2 டேபிள்ஸ்பூன் நெய் தடவி கொஞ்சம் சாதம்+க்ரேவி என மாறி மாறி போடவும்.கடைசியாக சாதம் வரும் படி போட்டு 2 கலர்களையும் ஊற்றி மீதமிருக்கும் நெய்யும் ஊற்றவும்.

*190 டிகிரி முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைக்கவும்.

*சிறிது நேரம் கழித்து சாதத்தை ஒன்றாக உடையாமல் கிளறிவிட்டு பரிமாறவும்.


பின்குறிப்பு :

*அவரவர் அவனுக்கேற்ப டைம் மாறலாம்.

Related Videos