வாழைக்காய் மிளகு பொரியல் | Plantain Pepper Poriyal
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 1
செய்முறை விளக்கம்:
*வாழைக்காயை நறுக்கி புளிகரைசலில் உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து 3/4 பதமாக வேகவைக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனைப்போக வதக்கவும்.
*பின் வேகவைத்த வாழைக்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.