கினோவா கோதுமைரவை இட்லி | Quinoa Wheat Rava Idli
தேவையான பொருட்கள்:
கினோவா - 1 கப்
கோதுமைரவை - 1 கப்
வெ.உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பிரவுன் அரிசி- 1/4 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*மேற்கூறிய பொருட்களில் கோதுமைரவை மற்றும் உப்பை தவிர அனைத்தையும் 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பொருட்கள் ஊறியதும் மைய அரைக்கவும்.
*அதனுடன் கோதுமைரவை மற்றும் உப்பு சேர்த்து கரைத்து 8 மணிநேரம் ஊறவைக்கவும்.
*மாவு நன்கு புளித்ததும் இட்லியாக ஊற்றி சுட்டெடுக்கவும்.
பின் குறிப்பு:
*மாவு நன்கு புளித்தால்தான் இட்லி நன்றாகயிருக்கும்.தோசையும் நன்கு மெலிதாக வரும்.இந்த இட்லிக்கு இட்லி பொடி மற்றும் கார சட்னி பெஸ்ட் காம்பினேஷன்.