குட்டி உருளை வறுவல் | Baby Potato Masala
தேவையான பொருட்கள்:
குட்டி உருளை -1/4 கிலோ
பொடியாக நருக்கிய வெங்காயம்- 1
நசுக்கிய இஞ்சி பூண்டு- 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
அரைக்க:
பொட்டுக்கடலை -11/2 டேபிள்ஸ்பூன்
புளி -ப்ளுபெர்ரி அளவு
வரமிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
கரம் மசாலா- 1/4 டீஸ்பூன்
சோம்பு- 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
கடுகு +உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை விளக்கம்:
* உருளையை வேகவைத்து தோலுரிக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் மற்றும் நசுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி உருளை 2 நிமிடங்கள் சேர்த்து வதக்கவும்.
*பின் அரைத்த மசாலா சேர்த்து நன்கு பொன்னிறமாக் வரும் வரை சிறுதீயில் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
பின் குறிப்பு: