தேங்காய்ப்பால் சாதம்

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி - 2 கப்
கெட்டி தேங்காய்ப்பால் - 3 கப்
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

பிரிஞ்சி இலை - 2
கிராம்பு - 2
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை விளக்கம் : 

*அரிசியைக் கழுவி நீரை வடிகட்டவும்.

*குக்கரில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரிசி, உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து 3 விசில் வரை வேக வைத்து எடுக்கவும்.

*ராய்த்தா, சிக்கன், மட்டன் குழம்பு, வெஜ் குருமாவுடன் சாப்பிட செம சூப்பர்ர்!!

Related Videos