அவியல் | Aviyal
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 1
தக்காளிக்காய் -2
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
மாங்காய் -1
புளிகரைசல்- 1/4 கப்
கேரட் - 1
பீன்ஸ் - 10
வாழைக்காய் - 1
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 3/4 கப்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
செய்முறை விளக்கம்:
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெங்காயத்தை தவிர மீதியுள்ள பொருட்களை சேர்த்து நைசாக அரைக்கவும்.கடைசியாக வெங்காயத்தை சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.
*காய்களை சற்றே பெரியதுண்டுகளாக நறுக்கவும்.
*வாழைக்காயை தோலுடனே துண்டுகளாக நறுக்கவும்.
*முதலில் முருங்கை, பீன்ஸ் மற்றும் கேரட் இவற்றை குறைவான நீர் விட்டு வேகவைக்கவும்.
*இவை பாதி வெந்ததும் வாழைக்காய் மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். *அடிக்கடி கரண்டியால் கிளறிவிடக்கூடாது,காய் குழைந்துவிடும்.
* காய்கள் முக்கால் பாகம் அனைத்தும் வெந்ததும் மாங்காய், தக்காளிக்காய் மற்றும் மீதமுள்ள மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
*அனைத்து காய்களும் ஒரளவு வெந்துருக்கும் இப்பொழுது புளிகரைசல், உப்பு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.*பச்சை வாசனை அடங்கியதும் கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கவும்.
பின் குறிப்பு:
*புளிக்கு பதில் தயிர் சேர்ப்பதாக இருந்தால் அவியல் நன்றாக ஆறியபின்னரே தயிரை சேர்க்கவும்.சூடாக சேர்த்தால் அவியல் நீர்த்துவிடும்.
*இதில் வெள்ளைபூசணி,சேனைக்கிழங்கு,பூசணிக்காய் சேர்க்கலாம்.
*முதலில் தாமதமாக வேகும் காய்களைச் வேகவைத்த பின்னரே மற்ற காய்களை சேர்த்து வேகவைக்கும்.இப்படி செய்வது காய்கள் குழையாமல் இருக்கும்.