பட்டர் பீன்ஸ் புலாவ் | Butter Beans Pulao

தேவையான பொருள்கள்:

பட்டர் பீன்ஸ் - 1 கப்
பாஸ்மதி - 2 கப்
வெங்காயம் - 1 நீளவாக்கில் நறுக்கியது
தக்காளி -1 பொடியாக நறுக்கியது
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
மஞ்சள்தூள்,கரம்மசாலா - தலா 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 4
சோம்பு - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 5

செய்முறை விளக்கம் :

*பட்டர் பீன்ஸை முதல்நாள் இரவே ஊறவைத்து,உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் வரை வேகவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய் தவிர அனைத்தையும் நைசாக அரைத்து,கடைசியாக தேங்காய்த்துறுவல் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம், உப்பு, அரைத்த மசாலா, கரம் மசாலா, மஞ்சள்தூள் மற்றும் தக்காளிஎன ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் புதினா கொத்தமல்லி, வேகவைத்த பட்டர் பீன்ஸ் மற்றும் அரிசி சேர்த்து வதக்கவும்.

*பட்டர் பீன்ஸ் வேகவைத்த நீரையும்  சேர்த்து 3 கப் நீர் சேர்த்து 10 நிமிடம்வரை வேகவைக்கவும்.

*ராய்தா அல்லது வறுவலுடன் பரிமாறவும்.

Related Videos