வெள்ளை நவரத்ன குருமா | /Navratan Korma In White Gravy
தேவையான பொருட்கள்:
வெங்காயம் -1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
பனீர் துண்டுகள்- 100 கிராம்
துண்டுகளாகிய உருளை - 1/2 கப்
துண்டுகளாகிய கேரட் - 3/4 கப்
துண்டுகளாகிய பீன்ஸ்- 3/4 கப்
காலிபிளவர் பூக்கள் - 3/4 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
பால் - 1 கப்
முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன்
தயிர்- 1/2 கப்
தேங்காய்பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி+திராட்சை - தலா 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 2
ஏலககய் - 3
பிரியானி இலை- 3
அன்னாசிப்பூ - 1
செய்முறை விளக்கம்:
*வெங்காயத்தை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் வேகவைத்து ஆறியதும் விழுதாக அரைக்கவும்.
*காய்களை தனிதனியாக வேகவைத்துக் கொள்ளவும்.
*சிறிது சுடுநீரில் தேங்காய்பவுடரை சேர்த்து கரைத்து அதனுடன் முந்திரிவிழுது மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயவிழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் காய்கள், தயிர் கலவை சேர்த்து சிறிது நேரம் வதக்கி பால் மற்றும் உப்பு சேர்த்து சிறிதீயில் கொதிக்கவைத்து வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்.
*புலாவ்,சப்பாத்தியுடன் பரிமாற நன்றாக இருக்கும்.
பின் குறிப்பு:
*இதில் குடமிளகாயும் சேர்க்கலாம்.என்னிடம் இல்லாததால் பீன்ஸ் மற்றும் குடமிளகாய் சேர்க்கவில்லை.
*தேங்காய் பவுடர் பதில் தேங்காய் அரைத்து சேர்க்கலாம்.
*விரும்பினால் அன்னாச்சிபழ துண்டுகள் சேர்த்து பரிமாறலாம்.